ரன்னிங்கில் ஏற வந்த 13 அடி மலைப்பாம்பு - எகிறி குதித்து ஓடிய பைக் ஓட்டுநர்
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து ஊட்டமலை செல்லும் சாலையில் உள்ள முதலைப்பண்ணை அருகே 13 அடி நீள மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்தது. இந்த பாம்பு ஒருவரின் இருசக்கர வாகனத்தில் ஏற முயன்றதால், வாகன ஓட்டிகள் பதறியடித்து ஓடினர். பின்னர் தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் பாம்பினை பிடித்து, வனப்பகுதிக்குள் விட்டனர்.