இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (07-10-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-10-07 15:50 GMT

  • மூண்டது போர் - தொடரும் தாக்குதல்
  • இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் பலி...
  • போர் மூண்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிப்பு...
  • ஹமாஸ் பெரும் விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாகு எச்சரிக்கை...
  • உலக நாடுகள் கண்டனம்
  • இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி இன்று கடும் கண்டனம்...
  • அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவு...
  • பாலஸ்தீன், ஜெருசலேம் விடுதலை அடையும் வரை, ஹமாஸ் படைக்கு ஆதரவாக செயல்படுவோம் என ஈரான் அதிரடி...
  • இந்தியர்களுக்கு எச்சரிக்கை - உதவி எண் அறிவிப்பு
  • இஸ்ரேலில் போர் மேகம் சூழ்ந்திருப்பதால் அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை...
  • இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கான உதவி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிவிப்பு...
  • தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழகத்தை சேர்ந்த 15 பேர் அயலக தமிழர் நலவாரியத்திற்கு கோரிக்கை... 
Tags:    

மேலும் செய்திகள்