இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (15-10-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-15 14:50 GMT
  • "அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை"
  • அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சியில் மிக கனமழை பெய்யும்...
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தகவல்...
  • 12 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்
  • அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை உள்ளி​ட்ட 12 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்...
  • வடகிழக்கு பருவமழை தற்போது வரை, இயல்பை விட 84 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என்று, வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்...
  • "சென்னைக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட்"
  • சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட்..........
  • நாளை மழை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.........
  • 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  • கனமழை காரணமாக, சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.....
  • செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு....
  • புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  • புதுச்சேரியிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை....
  • கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கல்வி அமைச்சர் அறிவிப்பு.....
  • சென்னை வேளச்சேரி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் படகு மூலம் மீட்பு...
  • ஏஜிஎஸ் காலனி பகுதி மக்கள் வேறு இடங்களுக்கு தஞ்சம்...
  • அரை நாள் மழைக்கே இடுப்பு அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது...
  • மழைநீர் வடிகால் பணிகள் கடந்த ஒருவருடம் நடந்தும் இதுவரை முடியவில்லை என, பொதுமக்கள் வேதனை...
  • சென்னை மற்றும் புறநகரில் நள்ளிரவு முதல் தொடரும் கனமழை.....
  • பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதி..
Tags:    

மேலும் செய்திகள்