கன்னியாகுமரி மாவட்டம் இரணியலைச் சேர்ந்த அய்யப்பனுக்கு சுபாலட்சுமி என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். அய்யப்பனுக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும், இதனால் குடும்பத்தை சரிவர கவனிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 7 மாத கர்ப்பிணியாக இருந்த சுபாலெட்சுமி, சுயநினைவின்றி வீட்டில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் திரண்ட உறவினர்கள், கணவனின் குடும்பத்தினர் மீது சந்தேகம் இருப்பதாகவும், சுபா லட்சுமியை அவர்கள் ஜாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் குற்றம்சாட்டினார். சுபாலட்சுமியின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சுபாலட்சுமியின் சடலத்தை வாங்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறினார்கள்.