இந்த மாதம் மட்டுமே கன்னியாகுமரியில் 34 பேருக்கு டெங்கு - அதிர்ச்சி ரிப்போர்ட்
கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இன்று வரை 34 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்... அதில் 24 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்... இதனைத் தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது... இதே போல் நிபா வைரஸ், கேரளம் மாநிலம் கோழிக்கோட்டில் பரவி வருவதால், அதற்காகவும் தமிழக- கேரளம் எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.