2 வாரத்தில் 30 பேர்.. - குழந்தைகளை குறிவைக்கும் நோய் - பெற்றோர்களே கவனம்

Update: 2023-11-17 15:32 GMT

மதுரையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 30 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த 17 பேர், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 13 பேர் என மொத்தம் 30 பேருக்கு டெங்கு உறுதியாகியுள்ளது.

அதிலும் நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலும், 1 முதல் 5 வயது மற்றும் 8 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளை டெங்கு அதிகம் பாதிக்கிறது.

இன்றைய நிலவரப்படி 98 பேர் காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் குறித்து ரத்த பரிசோதனை நடத்தப்படவுள்ளது. மாவட்டம் முழுவதிலும் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாத வகையில் பள்ளிக்கூடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியைத் தடுப்பது குறித்து நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்