கோயில் யானையை கண்டு மிரண்ட நயன்தாரா
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், விக்னேஷ் சிவனுடன் ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு சென்று நயன்தாரா தரிசனம் செய்தார்.
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், விக்னேஷ் சிவனுடன் ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு சென்று நயன்தாரா தரிசனம் செய்தார். அப்போது, கோயில் யானை மங்களத்திற்கு வாழைப்பழம் கொடுக்க நயன்தாரா சென்றார். அப்போது, யானையை கண்டு அஞ்சி மிரண்ட அவர், விக்னேஷ் சிவன் மூலம் யானைக்கு வாழைப்பழத்தை வழங்கினார். கோயிலுக்கு நயன்தாரா வந்ததை அறிந்து ரசிகர்கள் கூடியதால், கோயிலின் வடக்கு வாசல் வழியாகவே அவர் திரும்பிச் சென்றார்.