பேருந்தில் கொள்ளையடித்த பெண்கள் - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

பேருந்தில் நகையை திருடிய மூன்று பெண்களுக்கு தர்ம அடி கொடுத்த மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2022-05-09 01:44 GMT
பேருந்தில் நகையை திருடிய மூன்று பெண்களுக்கு தர்ம அடி கொடுத்த மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். சேலத்தில் இருந்து திண்டுக்கல் சென்ற அரசு பேருந்து ஒன்றில் சந்தாமணி என்பவரது நகை காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார். அப்போது மோகனூர் பிரிவு சாலை நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் பேருந்தில் இருந்து இறங்கிய 3 பெண்களிடம் நடத்துனர் விசாரனை நடத்தியுள்ளார். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரனான தகவல்களை அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த நடத்துனர் மற்றும் பொதுமக்கள் பெண்களுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து திருடிய நகையை பெண்கள் ஒப்படைத்ததை தொடர்ந்து , அவர்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்