அதிகாலை முதலே அலைமோதிய பொதுமக்கள்... அட்சய திரிதியை தினத்தில் அமோக விற்பனை
அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு, சென்னை தி.நகரில் நேற்று அதிகாலை முதலே நகை விற்பனை களைகட்டியது.
அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு, சென்னை தி.நகரில் நேற்று அதிகாலை முதலே நகை விற்பனை களைகட்டியது. நகைக் கடைகளில், தோரணம் மற்றும் வாழை மரம் கட்டி சிவப்பு கம்பளம் விரித்து வாடிக்கையாளர்கள் வரவேற்கப்பட்டனர். இதனிடையே, தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்ததால், சென்னை தி.நகர் பகுதியில் மிக அதிக அளவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.