உதகையில் துவங்கியது கோடை சீசன் படகு சவாரியில் 'CHILL' பண்ணும் மக்கள்

உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்ய குவிந்துள்ளனர்.

Update: 2022-05-01 12:33 GMT
உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்ய குவிந்துள்ளனர். இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்துள்ளதால் வழக்கம் போல உதகையில் சீசன் களைகட்டி உள்ளது. இதனையடுத்து சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்கும் விதமாக குடும்பத்துடன் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். உதகை தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்ப்பதுடன் படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் உதகை படகு இல்லத்தில் கூட்டம் அலை மோதுகிறது. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் வருவதால் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே சுற்றுலா பயணிகளுக்காக மோட்டார் படகு, மிதி படகு, துடுப்பு படகுகளை படகு இல்ல நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்