"பணமும் போச்சு.. காரும் போச்சு"; போதையில் கார் ஓட்டி படாதபாடு படும் நபர்-வழக்கறிஞரிடம் கதறும் ஆடியோ

நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீட்க, இடைத்தரகரிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்ததாக நபர் ஓருவர் ஆடியோ பதிவு வெளியிட்டுள்ளார்

Update: 2022-04-29 02:49 GMT
நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீட்க, இடைத்தரகரிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்ததாக நபர் ஓருவர் ஆடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், குடிபோதையில் கார் ஓட்டியதாக குற்றவழக்குப் பதிசெய்யப்பட்டு , அவரது காரை திசையன்விளை போலீசார் பறிமுதல் செய்ததாக தெரிகிறது. இந்நிலையில் இடைத்தரகர் ஒருவரிடம்17 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து, காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட காரை அவர் மீட்டுள்ளார். இந்நிலையில் மீட்கப்பட்ட காரை 4 நாட்கள் கழித்து மீண்டும் போலீசார் எடுத்து சென்றதாகவும், தான் இழந்த பணம் குறித்தும், கார் குறித்தும் தனது வழக்கறிஞர் ஒருவரிடம் அவர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்