நடிகர் விவேக்கின் முதல் ஆண்டு நினைவு தினம்... முதல்வருக்கு கோரிக்கை விடுத்த பசுமை கலாம் அமைப்பினர்

நடிகர் விவேக் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2022-04-17 11:47 GMT
நடிகர் விவேக்கின் முதல் ஆண்டு நினைவு தினம்... முதல்வருக்கு கோரிக்கை விடுத்த பசுமை கலாம் அமைப்பினர்

நடிகர் விவேக் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விவேக் பசுமை கலாம் அமைப்பின் சார்பில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், நடிகர் பாபி சிம்ஹா ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், விவேக்கின் இல்லம் உள்ள சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயரிட வேண்டும் என விவேக் பசுமை கலாம் அமைப்பு சார்பில் முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக பூச்சி முருகன் உறுதியளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்