தேர் இழுக்கும்போது நேர்ந்த விபரீதம்... கால்வாயில் தவறி விழுந்த பக்தர்கள் - பரபரப்பு காட்சிகள்
பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்த போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் என பலரும் கழிவுநீர் கால்வாயினுள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் அடுத்த உத்தரகோசமங்கையில் மங்களநாதர் சாமி கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 4 ரத வீதிகளிலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் மங்களேஸ்வரி அம்பாள் மற்றும் மங்களநாதர் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் கூட்டத்தால், உத்தரகோசமங்கை பகுதி ஸ்தம்பித்தது. இதனிடையே, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்த போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் என பலரும் கழிவுநீர் கால்வாயினுள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.