டெல்லி திமுக அலுவலகத்தின் சிறப்பம்சம்

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக கட்சி அலுவலகத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு....

Update: 2022-04-02 00:45 GMT
தீனதயாள் உபாத்தியாயா சாலையில் 11,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள திமுக கட்சி அலுவலகம் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. அலுவலகத்திற்கு வெளியே 45 அடி உயரத்தில் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது கொடிக்கம்பம் கட்சி அலுவலகத்தின் நுழைவுவாயிலின் இடதுபுறத்தில் மார்பளவு அண்ணா சிலையும், வலதுபுறத்தில் மார்பளவு கருணாநிதி சிலையும் நிறுவப்பட்டுள்ளது. 
தரை தளத்தில், முரசொலி மாறன் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ள அரங்கத்தில்,  கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்படத்தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.முதல் தளத்தில் கட்சி அலுவலகப் பணிகளை மேற்கொள்வதற்கு அலுவலகங்களும், ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதற்கு 11 பேர் அமரும் வகையில் சிறிய அளவிலான கூட்ட அரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.முதல் தளத்தில் உள்ள அலுவலக அறைகள் அனைத்திலும், தொலைபேசி மற்றும் கணினி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இரண்டாவது தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வெடுக்க சூட் அறை ஒன்றும், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்குவதற்காக இரண்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்