தொழிலதிபர் வீட்டில் கொள்ளை... காட்டிக்கொடுத்த சிசிடிவி - கர்நாடக நபர் கைது!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பேகேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபதிபர் சிவ பாலசுந்தரம். இவர் தனது மகன் படிப்பு செலவுக்காக சேர்த்து வைத்திருந்த ரூபாய் 7 லட்சத்தை கடந்த 16 ஆம் தேதி மர்மநபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து, சிவ பாலசுந்தரம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கர்நாடகாவைச் சேர்ந்த ஆசிப் என்பதும் அவர் மங்களூருவில் பதுங்கி இருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து, மங்களூரு சென்று ஆசிப்பை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூபாய் 6 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.