தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்

2022 - 23ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட், இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Update: 2022-03-17 21:10 GMT
2022 - 23ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட், இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி, தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்நிலையில், 2022 - 23ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு, தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. 
 
காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். 
 
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், இன்று பிற்பகலில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும்.
 
கடந்த ஆண்டு, திமுக தேர்தல் அறிக்கையின்படி முதல் முறையாக தமிழகத்தில் வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 
 
அதேபோல், இந்த ஆண்டும் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் வரும் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்