தி.மு.க. பெண் நிர்வாகி குத்திக் கொலை - மருமகன் வெறிச்செயல்
உடையானம்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரன் மனைவி ராக்கம்மாள் அப்பகுதியில் திமுக வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளராக இருந்து வந்துள்ளார்.
உடையானம்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரன் மனைவி ராக்கம்மாள் அப்பகுதியில் திமுக வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது மகள் சோலைமணிக்கும், அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் ராக்கம்மாள் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் செய்து வைத்த சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக மூர்த்தி சோலைமணியை பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், ராக்கம்மாள் தான் என நினைத்து மூர்த்தி அவரது வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக குத்தியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராக்கம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.