"மதுவிலக்கு கொள்கையில் திமுக இரட்டை வேடம்" - ஓபிஎஸ் குற்றச்சாட்டு !

திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டியுள்ளார்.

Update: 2022-03-09 10:11 GMT
மதுவிலக்கு கொள்கையில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 

2020-2021 ஆம் ஆண்டில் மதுவிற்பனை 33 ஆயிரத்து 811 கோடியாக இருந்தது என்றும் 2021-2022 ஆம் ஆண்டில் 35 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

தற்போது மதுபானங்களின் விலையை 10 முதல் 80 ரூபாய் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளதாகவும், இதன் மூலம் 2022-2023 ஆம் ஆண்டில் டாஸ்மாக் வருவாய் 40 ஆயிரம் கோடியை தாண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் கூறிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு எதையும் செய்யாமல், வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். 

இது திமுக-வின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டி இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். 

தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப, மதுக்கடைகளை படிப்படியாக குறைக்கவும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகே உள்ள மதுக்கூடங்களை மூடவேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பினைச் செயல்படுத்தவும், இது தொடர்பாக மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற 







Tags:    

மேலும் செய்திகள்