அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுள்ளது.
அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், அனைத்து பள்ளிகளிலும் மார்ச் 20-ஆம் தேதி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள், முக்கியத்துவம், பெற்றோர்களின் பங்கு ஆகியவற்றை பெற்றோர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 20ஆம் தேதி கூட்டம் நடைபெற உள்ளதால், 19 ஆம் தேதி அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.