ஆரணியில் சாந்தா சுவாமி மரணம்

ஆரணி அருகே சர்வ மங்கள பீடத்தின் மடாதிபதி சாந்தகுமார், மாரடைப்பால் உயிரிழந்தார்.

Update: 2022-03-09 03:17 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் ஆரணி அருகே உள்ள திருவலம் கிராமத்தில் இயங்கும், சர்வ மங்கள பீடத்தின் மடாதிபதி சாந்தகுமார், மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஆரணி பகுதியில் ஆன்மிகவாதியாக திகழ்ந்து வந்த அவருக்கு, 2 நாட்களுக்கு முன், ஆரணி அடுத்த திருமலை கிராமத்திற்கு சென்றபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்தார்.
ஸ்ரீ சாந்தா சுவாமி மரணத்தை தொடர்ந்து அவருடைய சீடர்கள், அவருக்கு மாலை அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர். பின்னர், திருவலம் கிராமத்தில் உள்ள சர்வ மங்கள பீடத்திற்கு உடலை எடுத்துச் சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்