22 ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளும் இயங்குமா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பள்ளிகளுக்கு, மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பார்கள் என பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பள்ளிகளுக்கு, மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பார்கள் என பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 22 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்கள் பெரும்பாலும், கல்லூரிகளிலே அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில இடங்களில் பள்ளிகளில் அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், 22 ஆம் தேதி பள்ளிகள் முழுமையான அளவில் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, 99 விழுக்காடு வாக்கு எண்ணிக்கை மையங்கள் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பள்ளிகளில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தால், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பார்கள் என்றும் காகர்லா உஷா தெரிவித்துள்ளார். இதனிடையே நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் 5 வார்டுகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.