"வேட்பாளர்கள் திமுகவினரால் மிரட்டப்படுகின்றனர்" - அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் குற்றச்சாட்டு
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு முடிக்கப்பட்ட திட்டங்களையே முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து வருவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு முடிக்கப்பட்ட திட்டங்களையே முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து வருவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசியவர்,எந்த நேரமும் அதிமுக தொண்டர்களால் தன்னை சந்திக்க முடியும் என கூறிவர், ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் கதவை கூட திமுக எம்எல்ஏக்களால் கூட தொடமுடியாத நிலை உள்ளதாக கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் பணம் கொடுத்தும், ஆசை வார்த்தை கூறியும்,வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் வாங்க வைத்து வருவதாக குற்றம்சாட்டினார். பிறகு எதற்காக இந்த தேர்தல் நடைபெறுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.