"சிவசங்கர் பாபாவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது" - தமிழக சிறைத்துறை தகவல்

பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு, உலக தரத்திலான சிகிச்சை அளிக்கப்படுவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-02-12 03:13 GMT
பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு, உலக தரத்திலான சிகிச்சை அளிக்கப்படுவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சிறைத்துறை தெரிவித்துள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதாகி, சிவசங்கர் பாபா சிறையில் உள்ளார். இந்நிலையில் சிவசங்கர் பாபாவின் சகோதரி ஜெயலட்சுமி, நீரிழிவு, பக்கவாதம், இதய நோயால் அவதிப்படும் தனது சகோதரருக்கு, சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை என குற்றம் சாட்டி மனுத்தாக்கல் செய்தார். சிவசங்கர் பாபாவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிக்கை விடுத்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, சிவசங்கர் பாபாவுக்கு, ஸ்டான்லி மருத்துவமனையில் வி.ஐ.பி.-களுக்கு வழங்கப்படும் உலகத்தரத்திலான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், சிகிச்சையில் திருப்தி இல்லை என்றால், ஓமந்தூரார் உயர் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை பிப்ரவரி 18-க்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்