அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து - தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்த, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-02-12 01:51 GMT
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்த, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது, செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் அளிக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கில் காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த புகார்தாரர்கள், பணத்தை திருப்பி பெற்று கொண்டதாக தெரிவித்தனர். இதை பதிவு செய்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். 
இந்நிலையில் இந்த உத்தரவுக்கு தடை கோரி தர்மராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, எதிர் மனுதாரர்களான சண்முகம், அருள்மணி மற்றும் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்