கோகுல்ராஜ் கொலை வழக்கு - மார்ச். 5 ஆம் தேதி தீர்ப்பு?

சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மார்ச் 5 ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2022-02-10 03:51 GMT
சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மார்ச் 5 ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ், கடந்த 2015 இல் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். பின்னர் இது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. மேலும், வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாட்சிகள் விசாரணை முழுமையாக முடிந்ததால், தீர்ப்பை மார்ச் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சம்பத்குமார் உத்தரவிட்டுள்ளார். ஆகவே, அன்றைய தினம் வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்