கர்நாடகா வனப்பகுதியில் பதுங்கிய கொள்ளையன் - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தமிழக போலீசார்

தஞ்சையில் பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்த 4 பேரை கைது செய்த போலீசார் 50 சவரன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-02-04 10:45 GMT
தஞ்சையில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்தவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில்  பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை போலீசார் அடையாளம் கண்டனர். கொள்ளையில் முக்கிய குற்றவாளியான கொடுங்கசாமி, கர்நாடக வனப்பகுதியில் பதுங்கி இருந்ததாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் கொடுங்கசாமியை கைது செய்தனர். தொடர் விசாரணையில் ஆங்காங்கே பதுங்கியிருந்த கூட்டாளிகளான மோகன் குமார், தியாகராஜன், நாகராஜ் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், 15க்கும் மேற்பட்ட வீடுகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதில் கொடுங்கசாமி மீது கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட  திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளனது.

Tags:    

மேலும் செய்திகள்