கூண்டிற்குள் புகுந்து சத்தமின்றி பறவைகளை உண்ட பாம்பு - காப்பாற்றப்பட்ட எஞ்சியிருந்த பறவைகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கூண்டிற்குள் புகுந்த பாம்பிடம் இருந்து பறவைகளை தன்னார்வலர்கள் பத்திரமாக மீட்டனர்.

Update: 2022-01-13 14:40 GMT
தஞ்சாவூர் மாவட்டத்தில் கூண்டிற்குள் புகுந்த பாம்பிடம் இருந்து பறவைகளை தன்னார்வலர்கள் பத்திரமாக மீட்டனர். சுந்தரம் நகரைச் சேட்ந்த இஷ்தாயிக், தனது வீட்டில் 100க்கும் மேற்பட்ட லவ் பேர்ட்சை வளர்த்து வருகிறார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், பாம்பு ஒன்று அந்த பறவைகளை ஒவ்வொன்றாக சாப்பிட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து எஞ்சியுள்ள பறவைகளைக் காப்பாற்றும் விதமாக பாம்பைப் பிடிக்க வந்த தன்னார்வலர்கள், கூண்டிற்குள் இருந்த 5 அடி நீள பாம்பைப் பிடித்து வனப்பகுதிக்குள் விடுவித்தனர். இதனால் மீதம் இருந்த பறவைகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்