150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில், 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன

Update: 2021-12-27 19:27 GMT
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில், 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில், மரைன் போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனை செய்த போது, 150 கிலோ கடல் அட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநர் ரியல்தீன் என்பரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. 


Tags:    

மேலும் செய்திகள்