உதய நிதி பிறந்த நாள் விழா படு ஜோராக நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயம் எல்லைக் கோட்டை நோக்கி சீறிப் பாய்ந்த மாடுகள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சட்டமன்ற உறுப்பினர் உதய நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் படு ஜோராக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சட்டமன்ற உறுப்பினர் உதய நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் படு ஜோராக நடைபெற்றது. கல்லல் மேற்கு ஒன்றியம் மற்றும் பாதரக்குடி திமுக இளைஞர்களால் மாபெரும் மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. 2 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் பந்தயத்தை அமைச்சர் பெரிய கருப்பன் துவக்கி வைத்தார். மொத்தம் 51 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில், வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. எல்லைக் கோட்டை நோக்கி துப்பாக்கிக் குண்டைப் போல் சீறிப் பாய்ந்த மாடுகளை வழி நெடுகிலும் பொதுமக்கள் குரலெழுப்பி உற்சாகப் படுத்தினர்.