சென்னையில் வழிப்பறி - 8 பேரை தாக்கி பணம் கொள்ளை

சென்னை கே.கே நகரில், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-26 12:46 GMT
சென்னை கே.கே நகரில், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.    

விருகம்பாக்கத்தில், ஆட்டோ ஓட்டுனர், பெட்ரோல் பங்க் ஊழியர் , குல்ஃபி ஐஸ் விற்பவர்கள் என அடுத்தடுத்து 5 பேரை கத்தியால் வெட்டி மர்மநபர்கள் 12  ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். நள்ளிரவில் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி தகவல் அறிந்த கே.கே நகர் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிய ஆயா கார்த்திக், சிவா, மாரிமுத்து, சதிஷ், கோபி சிறுவர்கள் 2 பேர் என 7 பேர் கும்பலை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள், 2 பட்டா கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.  இந்த கும்பல் ஏற்கனவே, கஞ்சா போதையில் கே கே நகர், விருகம்பாக்கம்,  வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் ஆட்டோ மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வாகனங்களை உடைத்து நொறுக்கியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்