மின் சேவைக் கட்டணங்களுக்கு 18% ஜி.எஸ்.டி வரி வசூலை, முதல்வர் ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
மின் சேவைகளுக்கான 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி வசூலிப்பை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
மின் சேவைகளுக்கான 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி வசூலிப்பை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் பதிவு கட்டணம், மின் இணைப்புக் கட்டணம், வளர்ச்சிக் கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு கட்டணம், மின் துண்டிப்புக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இதுவரை எந்த கட்டணத்துக்கும், சேவை வரி வசூலிக்கப்படவில்லை என கூறிய ஓ.பி.எஸ், 2017ம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு, 18 சதவிகித ஜி.எஸ்.டி. வரி வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளதாகவும் சாடியுள்ளார்.