நாவலர் இரா.நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா : சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

நாவலர் இரா.நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2021-12-26 10:26 GMT
நாவலர் இரா.நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழாவையொட்டி 
 அவரது சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம்  விருந்தினர் மாளிகையில் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து  சேப்பாக்கம் அரசுவிருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த நாவலர் இரா.நெடுஞ்செழியனின் மார்பளவு சிலையை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து நாவலர் இரா.நெடுஞ்செழியனின் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து நாட்டுடமையாக்கப்பட்ட நாவலர் இரா.நெடுஞ்செழியனின், நூல்களுக்கு அரசின் நூலுரிமைத் தொகையான 25லட்சத்தை  நாவலர்.நெடுஞ்செழியன் குடும்பத்தாரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்