பூஜையறையில் கற்பூரம் ஏற்றி வைத்து வழிபாடு : தீ சேலையில் பற்றி எரிந்து உயிரிழப்பு

காஞ்சிபுரத்தில் வீட்டின் பூஜையறையில் கற்பூரம் ஏற்றி வைத்து பூஜை செய்த முன்னாள் கல்லூரி பேராசிரியை சேலையில் தீப்பற்றி எரிந்ததில் உயிரிழந்தார்.

Update: 2021-12-26 10:02 GMT
காஞ்சிபுரத்தில் வீட்டின் பூஜையறையில் கற்பூரம் ஏற்றி வைத்து பூஜை செய்த முன்னாள் கல்லூரி பேராசிரியை சேலையில் தீப்பற்றி எரிந்ததில் உயிரிழந்தார். சின்ன காஞ்சிபுரம் சேஷாத்திரி பாளையத்தை சேர்ந்த ஜெயலட்சுமி வீட்டில் உள்ள பூஜை அறையில் கற்பூரம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தார். அப்பொழுது அவரது சேலையில் கற்பூரத்தின் தீப்பிடித்து எரிய தொடங்கியது. ஜெயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த கணவர் சரவணபவன் மற்றும் உறவினர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்து ஜெயலட்சுமியை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று உயிரிழந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்