" உயர் பதவியில் ஒரு வன்னியர் கூட இல்லை " - பாமக ராமதாஸ் குற்றச்சாட்டு
உயர் பதவியில் வன்னியர்கள் ஒருவர் கூட இல்லை என ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உயர் பதவியில் வன்னியர்கள் ஒருவர் கூட இல்லை என ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் பட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர்களுக்காக தாம் மட்டுமே போராடி வருவதாக கூறியுள்ளார். வன்னியர்களுக்கு இன்னொரு ராமதாஸ் பிறக்க போவதில்லை என்றும், இனி முடிவு செய்ய வேண்டியது வன்னியர்கள் தான் என்றும் தெரிவித்துள்ளார். வன்னியர்கள் வேறு கட்சியில் இருந்தாலும் சரி, பாமக விற்கு வர வேண்டாம் என்றும், வாக்கு மட்டும் பாமக விற்கு அளித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.