ரூ.1,500 கேட்ட மாணவிக்கு... ரூ. 8,500 கொடுத்த ஏ.டி.எம்...
சென்னையில் ஏடிஎம் எந்திரத்தில் கூடுதலாக வெளிவந்த 7 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசாரிடம் கராத்தே மாணவி திரும்ப ஒப்படைத்தார்.
சென்னை கொளத்தூரை சேர்ந்த கீர்த்தி லட்சுமி என்பவர், அம்பத்தூரில் உள்ள கனரா ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். ஏடிஎம் எந்திரத்தில் ஆயிரத்து 500 ரூபாய் பதிவிட்ட அவருக்கு, 8ஆயிரத்து 500 ரூபாய் பணம் வெளிவந்துள்ளது. வங்கி கணக்கில் இருந்து ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே எடுத்ததை உறுதி செய்த அவர், திருமங்கலம் காவல் துணை ஆணையரிடம் 7 ஆயிரம் ரூபாயை ஒப்படைத்தார். பிறரின் பணத்திற்கு ஆசைப்படாமல் திரும்ப ஒப்படைத்த மாணவியை போலீசார் வெகுவாக பாராட்டினர்.