எஸ்சி எஸ்டி மாணவர்களின் கல்வி உதவிதொகையில் மோசடி - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை

எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில்17 கோடியே 36 லட்சம் மோசடியில் ஈடுபட்ட, அதிகாரிகள் மற்றும் கல்லூரி முதல்வரிடம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

Update: 2021-12-21 17:47 GMT
எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில்17 கோடியே 36 லட்சம் மோசடியில் ஈடுபட்ட, அதிகாரிகள் மற்றும் கல்லூரி முதல்வரிடம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

கடந்த 2018 ம் ஆண்டு எஸ்சி எஸ்டி கல்வி உதவித்தொகை தொடர்பாக வெளியான சிறப்பு தணிக்கை அறிக்கை அடிப்படையில், 17 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரத்து 369 ரூபாய் மோசடி நடந்திருப்பதாக வழக்கறிஞர் அசோக்குமார் என்பவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக, பெயர் குறிப்பிடப்படாத ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கடந்த 4 ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் 52 கல்லூரிகளின் முதல்வர்கள் நாளை முதல் லஞ்ச ஒழிப்பு துறையில் நேரடியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சம்மன் அனுப்பினர். இதனைத் தொடர்ந்து நாமக்கல்லை சேர்ந்த எஸ்ஆர்ஜி கல்லூரி முதல்வர் உட்பட சில கல்லூரிகளின் முதல்வர்கள் இன்று நேரடியாக, சென்னை ஆலந்தூரில் உள்ள
லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர். இந்த மோசடி குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்