நகைக் கடையில் 11 கிராம் சங்கிலி திருட்டு - குழந்தைகளுடன் வந்த இளம்பெண் கைவரிசை

சென்னை பாண்டிபஜாரில், நகை வாங்குவது போல், 11 கிராம் தங்க நகைகளை திருடிய பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2021-11-03 07:01 GMT
தீபாவளி நேரம் என்பதால், தியாகராய நகர், பாண்டி பஜார் பகுதிகளில், வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதையொட்டி, பாண்டிபஜாரில் உள்ள நகைக் கடைக்கு குழந்தைகளுடன் சென்ற பெண் ஒருவர், கூட்ட நெரிசலை பயன்படுத்தி 11 கிராம் சங்கிலியை திருடியுள்ளார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சியை வைத்து தேடிய போலீசார், வண்டலூர் பகுதியை சேர்ந்த பிரியங்காவை பிடித்தனர். அவரை கைது செய்த நிலையில், ஏற்கனவே தாம்பரத்தில் உள்ள நகைக் கடையில் திருடிய 24 கிராம் வளையல் உள்பட 35 கிராம் நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்