அதிமுக மாவட்ட செயலரைத் தாக்கிய விவகாரம் - ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் மேல் முறையீடு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக மாவட்ட செயலாளரைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீடு செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக மாவட்ட செயலாளரைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீடு செய்துள்ளார்.
கடந்த மாதம் 24ம் தேதி, சாத்தூர் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில், மாவட்ட செயலரை தாக்கியதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் தரப்பில் நீதிமன்றத்தில் முறையீடு முன் வைக்கப்பட்டது. அதில், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமீன் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்திலோ அல்லது தலைமை நீதிபதியிடமோ முறையிடக் கோரிய நிலையில், இன்று தலைமை நீதிபதி அமர்வு விடுமுறை என்பதால், மதுரைக்கிளையில் முறையிடுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, முன் ஜாமீன் கோரிய மனுவின் விவரங்களைப் பார்த்த பின்பு, வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.