ரூ.4.75 கோடி மோசடி வழக்கு - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராத‌மும் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-04 14:03 GMT
அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராத‌மும் விதிக்கப்பட்டுள்ளது.

 
ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்தவர் செல்லமுத்து. இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து அன்னை இன்போடெக் என்ற நிறுவனத்தை கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கினார்.
 
இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தினால் அதற்கு 24 சதவீத தொகையை வட்டியாக தருவதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்த நிலையில்,
 
  118 முதலீட்டாளர்களிடம் இருந்து 4 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் கிடைத்த‌து. ஆனால் அதன் பின், Card - 4 செல்லமுத்து பணத்தை திருப்பி கொடுக்காத‌ நிலையில்,  முதலீடு செய்த நபர்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

இந்த வழக்கு விசாரணையானது கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. Card - 5 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி செல்லமுத்து விற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 4 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.  
Card - 6 மேலும் செல்லமுத்து நண்பர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்