நீலகிரியில் 9 நாட்களாக போக்குகாட்டும் புலி - 10-வது நாளாக புலியை தேடி பயணம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சுற்றும் புலியை பிடிக்க, புதிய வியூகத்துடன், தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சுற்றும் புலியை பிடிக்க, புதிய வியூகத்துடன், தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றியுள்ள பகுதிகளில், 4 பேரை கொன்ற புலியால், பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ட்ரோன் கேமரா உள்ளிட்ட பல்வேறு நவீன கருவிகள் மற்றும் மோப்ப நாய் மூலம் புலியை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. 9 வது நாளான நேற்றும், புலி போக்கு காட்டி காட்டுக்குள் பதுங்கியது. பத்தாவது நாளான இன்று புலியை தேடிப் பிடிக்க, புதிய வியூகமாக 2 கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. யானை மீது, மயக்க மருந்து நிரப்பிய ஊசி மருந்துடன் கால்நடை மருத்துவர்கள்
தயாராக உள்ளனர். புலியின் இருப்பை உறுதி செய்யும் போது, துப்பாக்கி மூலம், புலிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தயாராக உள்ளனர். புலியின் இருப்பை உறுதி செய்யும் போது, துப்பாக்கி மூலம், புலிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.