குற்றவாளிகளை கண்டறியும் காவல்துறை செயலி - சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
முக அடையாளம் மூலம் குற்றவாளிகளை கண்டறியும் காவல்துறையின் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
முக அடையாளம் மூலம் குற்றவாளிகளை கண்டறியும் காவல்துறையின் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தலைமைச்செயலகத்தில் எப்ஆர்எஸ் செயலியின் பயன்பாட்டை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். உயர் அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். காவல் அலுவலர்கள் ரோந்துப் பணி, வாகனத் தணிக்கை மற்றும் இதர காவல் பணிகளை மேற்கொள்ளும் போது, இச்செயலியைப் பயன்படுத்தி, குற்றவாளிகள், சந்தேகத்திற்குரிய நபர்களின் புகைப்படம் மூலமாக அவர்களின் முழு குற்றப் பின்னணியினையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. அத்துடன் காணாமல் போன நபர்களையும் இச்செயலி மூலம் கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க வழிவகை ஏற்படும் என்றும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் திருவிழாக்கள் போன்ற பொது இடங்களில் குற்றவாளிகள் நடமாடினால், அவர்களை எளிதாக கண்டுபிடிக்க இயலும் எனவும் தெரிகிறது.