தடையை மீறி மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை - மார்க்கெட்டை இழுத்து மூடிய நகராட்சி ஆணையர்

காரைக்கால் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடை, மீன்கள் மற்றும் இறைச்சி கடைகள் திறக்க தடை விதித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் நேரு மீன் மார்க்கெட்டில் அதிகாலை முதல் தடையை மீறி 50 மேற்பட்ட மீன் வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட்டனர். இதனை அறிந்த நகராட்சி ஆணையர் காசிநாதன், நேரில் சென்று அனைத்து வியாபாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து ஆணையரின் உத்தரவின்படி போலீசார் உதவியுடன் மீன் மார்க்கெட்டை நகராட்சி அதிகாரிகள் இழுத்து மூடினர்.