5 காவலர்களுக்கு காந்தியடிகள் விருது அறிவிப்பு - குடியரசுத் தினத்தன்று முதலமைச்சர் விருது வழங்குகிறார்
கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறையினருக்கு காந்தியடிகள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறையினருக்கு காந்தியடிகள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்தில், சென்னையில் காவல் துணை கண்காணிப்பாளராக உள்ள தட்சணாமூர்த்தி, வேலூரில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் குமார், உளுந்தூர்பேட்டையில் காவல் ஆய்வாளராக இருக்கும் சக்தி, முசிறியில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் சிதம்பரம், சுங்குவார்சத்திரத்தில் தலைமைக் காவலாரக இருக்கும் அசோக் பிரபாகரன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், விருதுகள் வழங்கி கவுரவிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.