நிலத்தகராறு; தாய், மகன் கைது - காவல்துறையினருக்கு ரூ.5 லட்சம் அபராதம்

சென்னையில், நிலத்தகராறில் தலையிட்டு தாய், மகனை கைது செய்த காவல்துறையினருக்கு 5 லட்ச ருபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-10-02 04:17 GMT
சென்னையில், நிலத்தகராறில் தலையிட்டு தாய், மகனை கைது செய்த காவல்துறையினருக்கு 5 லட்ச ருபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை எருக்கஞ்சேரியை சேர்ந்த தயாநிதி என்பவர் 2018-ல் தற்கொலை செய்து கொண்டார். அதன்பின், ஜெயந்தி என்பவர், வீட்டை தயாநிதி தனக்கு விற்பனை செய்து விட்டதால், உடனடியாக காலி செய்யும் படி, அவரது மனைவி சித்ராவை மிரட்டியுள்ளார். இது தொடர்பாக சித்ரா போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதற்கிடையே, ஜெயந்தியின் புகாரின் அடிப்படையில், சித்ராவையும் அவரது மைனர் மகனையும் கொடுங்கையூர் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது, இயற்கை உபாதைகளை கழிக்க விடாமலும், மாணவனை கல்லூரி செல்ல விடாமலும் தடுத்துள்ளனர். இது தொடர்பாக சித்ரா மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த நிலையில்,
காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோருக்கு தலா இரண்டரை லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்