மகிளா சக்தி கேந்திரா திட்டம் மாற்றம் - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை

மகிளா சக்தி கேந்திரா திட்டத்திற்கு பதிலாக புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக சமூகநலன் இயக்குநர் டி.ரத்னா, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்

Update: 2021-10-02 02:49 GMT
மகிளா சக்தி கேந்திரா திட்டத்திற்கு பதிலாக  புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக சமூகநலன் இயக்குநர் டி.ரத்னா,  சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.ஆகஸ்ட் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், மகிளா சக்தி கேந்திரா திட்டம், பெண்களுக்கான பாதுகாப்பிற்கான திட்டங்களைக் கொண்ட சம்பல் திட்டம் என்றும், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டங்களை கொண்ட சமர்த்யா திட்டம் என 2 திட்டங்களாக செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.அதன்படி, மகிளா சக்தி கேந்திரா திட்டத்திற்கு பதிலாக சமர்த்யா திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு 2024-ம் ஆண்டுவரை அமலில் இருக்கும் என்றும், பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பாக தேசிய, மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் கேந்திரங்கள் உருவாக்கப்படும் எனவும், குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் வன்முறைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கான குறைதீர்ப்பை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் இதன் மூலம் செயல்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிளா சக்தி கேந்திரா குழுவின் ஆள்சேர்ப்பு அதிகாரி என்ற வகையில் மாவட்ட ஆட்சியர்கள், அவரவர் மாவட்டங்களில் உள்ள இந்தக் குழுவின் ஊழியர்களை பணியில் இருந்து உடனே விடுவிக்க வேண்டும் என்றும், அதற்கான கோப்புகள் உள்ளிட்ட ஆவணங்களை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








Tags:    

மேலும் செய்திகள்