தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி,மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு,சேலம், தருமபுரி, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.ஏனைய மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை, நகரின் ஒருசில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.தெற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்றும்,தமிழகக் கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்றும் வீசக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.