ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி - முதுமலையில் இருந்து கும்கி யானை வருகை

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மக்களை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி புலியை பிடிக்க முதுமலையில் இருந்து கும்கி யானை சீனிவாசன் வரவழைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-30 14:43 GMT
கூடலூரில் 3 மனிதர்கள், 30க்கும் மேற்பட்ட மாடுகளை வேட்டையாடிக் கொன்ற ஆட்கொல்லி புலியை கடந்த 6 நாட்களாக மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. நேற்றுவரை பல முயற்சிகள் எடுத்த வனத்துறையினரை ஏமாற்றி புலி மாயமாகி உள்ள நிலையில்,  
மயக்க ஊசி செலுத்திவதில் வனத்துறையினர் தோல்வி அடைந்தனர். இந்த நிலையில் முதுமலையில் இருந்து கும்கி யானை சீனிவாசன் வரவழைக்கப்பட்டுள்ளது. கும்கி யானையின் மேல் கால்நடை மருத்துவரை அமரவைத்து துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வனத்துறையினர் உதவியாக தமிழக அதிரடிப்படையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு படையினர் 50க்கும் மேற்பட்டோர்  வரவழைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து புலியை தேடும் பணியில் பல குழுக்கள் பிரிந்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதும் நாள்தோறும் இந்த புலி தனது இடங்களை மாற்றி மாற்றி வருவதால் புலியை பிடிப்பதற்கான பணி தொய்வு அடைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஏழு நாட்களாக அப்பகுதி மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்