விமானப்படை அதிகாரி பாலியல் வழக்கு - எஃப்.ஐ.ஆரில் திடுக்கிடும் தகவல்கள்

கோவையில் பாலியல் வன்கொடுமை புகாரை வாபஸ் பெறுமாறு பெண் அதிகாரியை உயர் அதிகாரிகள் வற்புறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன என்பதை விரிவாக பார்ப்போம்

Update: 2021-09-30 14:24 GMT
கோவையில் ரெட்பீல்டில் விமானப்படை கல்லூரியில் பயிற்சிக்கு வந்த பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட விமானப்படை அதிகாரி அமிதேஷ் ஹர்முக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கோவை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பதியப்பட்டுள்ள FIR-ல் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.பாதிக்கப்பட்ட பெண் அளிக்கப்பட்ட புகாரின்படி,
செப்டம்பர் 9ம் தேதி நள்ளிரவில் விமானப்படை பயிற்சி மையத்தில் பார்ட்டி நடந்ததாகவும், அன்றைய தினம் கணுக்கால் காயத்திற்கு மருந்து உட்கொண்டு பார்ட்டியில் பங்கேற்றதாகவும் பெண் அதிகாரி கூறியுள்ளார்.பார்ட்டியில் மது அருந்தியதால் உடலுக்கு ஒத்துவராமல் வாந்தி எடுத்து ஓய்வெடுக்க அறைக்கு சென்றுள்ளார். அப்போது பார்ட்டியில் அறிமுகமான அதிகாரி அமிதேஷ் ஹர்முக், இரவு அறைக்கு வந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.சம்பவத்தை அறிந்த விங் கமாண்டர், எதிர்காலம் பற்றியும், வீட்டாரை நினைவில் கொண்டு புகார் அளிக்கலாமா வேண்டாமா என முடிவு செய்யுமாறு அறிவுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.புகார் அளித்தால், உனது அடையாளம் தெரியவரும் என அவர் கூறியதால் முதலில் புகார் அளிக்க மறுத்ததாக கூறியுள்ளார்.தொடர்ந்து அமிதேஷ் ஹர்முக் மீது புகார் அளிக்குமாறும், இல்லையேல் தனது சம்மதத்துடன் பாலியல் உறவு நடந்ததாக எழுதிகொடுக்குமாறு அதிகாரிகள் வற்புறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.இதற்கு பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கிறேன் என கூறியதால், அவரை அதிகாரிகள் சட்டவிரோத மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.அடுத்த நாள், மருத்துவ பரிசோதனை முடிவில் ரிசல்ட் நெகட்டிவ் என வந்ததாக பரிசோதனை முடிவை தெரிவித்துள்ளனர்.பின்னர் அதிகாரிகள் தன்னை அழைத்து புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டியதாகவும் FIR-ல் கூறப்பட்டுள்ளது.இப்படி, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு,புகாரை வாபஸ் பெறுமாறு அதிகாரிகளின் வற்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்