3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை பலி - பால்கனியில் விளையாடியபோது பரிதாபம்

சென்னையில் 3 வது மாடியின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த 18 மாத பெண் குழந்தை கீழே விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-09-30 13:10 GMT
சென்னை மண்ணடியை சேர்ந்தவர் செல்வகனி. பர்மா பஜாரில் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரின் மனைவி யாஸ்மின். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள். இதில் 18 மாதங்களான 3 வது குழந்தை, வீட்டின் 3வது தளத்தில் உள்ள பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென பால்கனி கம்பி மீது ஏறிய குழந்தை கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்