ஒரு வயது பேரக்குழந்தையை கொலை செய்த பாட்டி: வாயில் பிஸ்கட் கவரை வைத்து திணித்து கொலை
மகளும், மருமகனும் பிரிய காரணமே பேரக்குழந்தை தான் என நினைத்து ஒரு வயதான பிஞ்சுக்குழந்தையின் வாயில் பிஸ்கட் கவரை வைத்து பாட்டியே கொலை செய்த கொடூரம் கோவையில் அரங்கேறி இருக்கிறது....
கோவை ஆர்.எஸ்.புரம் கவுளிபிரவுன் பகுதியை சேர்ந்தவர் நித்யானந்தம். இவரின் மனைவி நந்தினி. இவர்களுக்கு 2 மகன்கள். இதில் இரண்டாவது மகன் துர்கேஷூக்கு ஒரு வயது.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்த நிலையில் கணவரிடம் கோபித்துக் கொண்டு நந்தினி தன் இளைய மகன் துர்கேஷை அழைத்துக் கொண்டு ஆர்எஸ் புரத்தில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
தாய் வீட்டில் இருந்த படி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார் நந்தினி. காலை 8 மணிக்கு வேலைக்கு செல்லும் அவர், இரவு 9 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். இந்த நேரங்களில் குழந்தையை நந்தினியின் தாய் நாகலட்சுமி பராமரித்து வந்துள்ளார். அவருக்கு வயது 52.
வழக்கம் போல சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு நந்தினி வீடு திரும்பிய நிலையில் குழந்தை துர்கேஷ் தொட்டிலில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தது. உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்றார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக கூறினர். உடனடியாக இந்த தகவல் போலீசாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அவர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது குழந்தையின் கை, கால் உள்ளிட்ட இடங்களில் சிறு சிறு காயங்கள் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், நந்தினி மற்றும் அவரின் தாய் நாகலட்சுமியை பிடித்து விசாரித்தனர். அப்போது தான், பாட்டியான நாகலட்சுமியே தன் பேரனை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.
பேரன் பிறந்த ஒரு சில மாதங்களிலேயே மகளும், மருமகனும் பிரிந்து விட்டதாகவும், இதற்கு காரணம் குழந்தை தான் என நினைத்து குழந்தையை கடந்த சில நாட்களாக அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் குழந்தை துர்கேஷ் வாயில் போடுவது வழக்கம். அப்படி சம்பவத்தன்றும் அந்த குழந்தை அதுபோல் செய்யவே ஆத்திரமடைந்த நாகலட்சுமி, வீட்டில் இருந்த பிஸ்கட் கவரை எடுத்து வாயில் திணித்து தொட்டிலில் படுக்க வைத்துள்ளார். வாயிலிருந்து பிஸ்கட் கவரை எடுக்க தெரியாத அந்த பச்சிளம் குழந்தை மூச்சடைத்து தன் உயிரை விட்டதும் தெரியவந்தது.
இத்தகையை கொடூரத்தை அவர் வாக்குமூலமாக கூறியதை கேட்டு போலீசார் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் பாட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.